அன்னுார்:அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளத்தில், கடந்தாண்டு ஆக., 15ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை குளம் சீரமைப்பு, மரக்கன்று நடுதல், பராமரித்தல், நீரூற்றுதல் உட்பட பணிகள் செய்யப்படுகின்றன. இப்பணியில் பங்கேற்க தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதே போல், எல்லப்பாளையத்தில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்திலும், இன்று காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை களப்பணி நடக்கிறது.
காட்டம்பட்டியில் உள்ள 240 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திலும் மரக்கன்றுகள் பராமரிக்கும் பணி இன்று காலை நடக்கிறது. ஆர்வமுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.