கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் விசாரணையில், 3, 724 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.22.82 கோடி பைசல் செய்யப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நிலுவையிலுள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை (லோக் அதாலத்) நேற்று நடந்தது. மாவட்ட நீதிபதி ராஜசேகர் தலைமையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணை துவங்கியது. மேலும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது.
சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வாகன விபத்து இழப்பீடு வழக்கு, நில ஆர்ஜிதம் , சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
மொத்தம், 25 அமர்வுகளில் விசாரணை நடத்தப்பட்டு, 3,724 வழக்கில் தீர்வு காணப்பட்டது. இதன் வாயிலாக, 22.82 கோடி ரூபாய்க்கு பைசல் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்படுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி சிவா செய்திருந்தார்.