காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி கல்வியில் துறை மற்றும் வரலாற்று துறை சார்பில் இந்திய பண்பாடு மரபு கட்டடகலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்க நிறைவு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமையேற்று பேசினார். சுற்றுசூழல் துறை அமைச்சர்மெய்யநாதன் கலந்து கொண்டார். அழகப்பா பல்கலை., புல முதன்மையர்கள் தனுஷ்கோடி பேராசிரியை சுஜாதா மாலினி, தொலைநிலைக் கல்வி இயக்குனர் குருமல்லேஷ் பிரபு தேர்வாணையர் கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.