மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் மூழ்கி, கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர் பலியானார்.
கோவை துடியலுார் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கிளின், 19 கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று, தனது நண்பர்கள் கார்த்திகேயன், கிங்ஸ்லே விக்டர், பிரின்ஸ் ஆகியோருடன் நெல்லித்துறை அடுத்த, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்ட விளாமரத்துாரில், பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதி நீரில் பிராங்கிளின் மூழ்கினார். மேட்டுப்பாளையம் போலீசார், நெல்லித்துறையில் இருந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று, உள்ளூர் மக்களுடன் தேடி, பிராங்கிளின் பிரேதத்தை மீட்டனர்.
மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.