மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்களை சுற்றுலா பயணியர் ரசிக்கின்றனர்.
இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் காண, நுழைவுச்சீட்டு பெற்றே, அவற்றை பயணியர் காண இயலும்.
அர்ஜுனன் தபசு சிற்பம் மட்டும், சாலையை ஒட்டி உள்ளதால், பயணியர் சாலையில் இருந்தே காண்பதாக உள்ளது. சென்னை இளைஞர்கள், புதிய பைக், புல்லட் வாகனத்தில் சுற்றுலா வந்தால், இச்சிற்ப பின்னணியில், வாகனத்தை நிறுத்தி, புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சிற்பத்தின் முன் வாகனங்களை நிறுத்தி, அதை ஓட்டுவது உள்ளிட்ட கோணங்களில், புகைப்படம் எடுக்கின்றனர்.
மேலும், சைக்கிளில், இருசக்கர வாகனங்களில், குழுவாக உலா வருவோரும், இச்சிற்பத்தின் முன், குழுவாக வாகனங்களுடன் நின்று, ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.