கோவை:துடியலுார் ரோடு, சரவணம்பட்டியில் அமைந்துள்ள, விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி முதல்வர் லில்லி பிரின்சி கூறியதாவது:
பத்தாம் வகுப்பில் மாணவியர் மனுஸ்ரீ, ஜியாகஸ்வான், மாணவர் ராகுல், 483 மதிப்பெண்களும், மாணவர் சஞ்சய் 482, மாணவி தர்ஷிஜி 481 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், மாணவி தீக் ஷா, மாணவர் மையன் அனீஷ் அஸ்ரப், 477 மதிப்பெண்களும், மாணவர் லலித் கிஷோர் 476, மாணவி பூஜா மீனா 474 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களை, பள்ளி சேர்மன் செல்வராஜ், தாளாளர் லிங்கசாமி, செயலாளர் யசோதா பாராட்டினர்.
இவ்வாறு, அவர் கூறினார்.