திருப்பூர்:கோடை மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில், கொசு உற்பத்தியாகி, மக்களுக்கு தொல்லையாக மாறியுள்ளது. அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கொசு உற்பத்தி அதிகரிக்க துவங்கியிருப்பதால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் வாய்ப்புள்ளது என, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.
எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தினர், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொசு மருந்து தெளிப்பதில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,'பொதுமக்கள், தங்கள் குடியிருப்பை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; தேங்காய் சிரட்டை, 'ட்ரம்' உள்ளிட்டவற்றில், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றனர்.