ஆவடி, ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், 37; கார் ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மின்சாரம் இல்லாததால், மனைவியுடன் ஆவடி மார்க்கெட்டில் பொருட்கள்வாங்க சென்றார்.
அப்போது, திடீரென மின்சாரம் வந்ததில், உயர் மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த 'டிவி, ப்ரிஜ்' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement