மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாவட்ட நீதிமன்ற லோக் அதாலத்தில் 6,988 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.25 கோடியே 21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார். நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வு நீதிபதிகள் ஆனந்தி, சடையாண்டி, உதயன், சுப்பிரமணியன், உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் கிருஷ்ணவேணி, கணபதி சுப்பிரமணியன், சுரேஷ்குமார் ஐசக் பால் விசாரித்தனர்.
மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 346 பட்டியலிடப்பட்டன. 25 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டதால் ரூ.4 கோடியே 50 லட்சத்து 277 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தார். 27 அமர்வுகளில் 7288 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. 6963 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.21 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 863 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நீதிபதிகள் ரஜினி, தமிழரசி, நாகராஜன்,அனுராதா, ரோகிணி, சார்பு நீதிபதிகள் ராபின்சன் ஜார்ஜ், உதயவேலவன், முருகன், சண்முகவேல்ராஜ், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர்(பொறுப்பு) நீதிபதி பசும்பொன் சண்முகையா பங்கேற்றனர்.
திருமங்கலத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில் நடந்தது. நீதிபதிகள் தினேஷ் குமார், சண்முகராஜ் வழக்குகளை விசாரித்தனர். 577 வழக்குகளில் ரூ. ஒரு கோடியே ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 686 அளவுக்கு தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி செயலாளர் அறிவொளி, வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.