திருநின்றவூர்:திருநின்றவூர், நடுக்குத்தகை ஊராட்சி ஒன்றியம், 2வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் நவமணி. இவரது மகன் ராஜேஷ், 34. நடுக்குத்தகை, காந்தி நகரைச் சேர்ந்த சகோதரர்களான சுந்தரமூர்த்தி, 26, சவுந்தரராஜன், 24, இடையே, நேற்று முன்தினம் இரவு, குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரையும் சமரசம் செய்ய ராஜேஷ் முயற்சித்தார். அப்போது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், இருவரும் 'இது எங்கள் குடும்ப பிரச்னை; நீ கேட்பதற்கு யார்' எனக் கேள்வி கேட்டபடி, இருவரும் ராஜேஷை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ், பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்படி, திருநின்றவூர் போலீசார், சகோதரர்கள் இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.