சோழவந்தான்: சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் ஏப்ரல் மாதம் பூக்குழி திருவிழா நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று மறுபூஜை விழா நடந்தது.
இதில் அக்னிகரகத்தில் இருந்த பொருட்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 12 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்வில் செயல் அலுவலர் இளமதி, முன்னாள் சேர்மன் முருகேசன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.