தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்புத்துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை ப்ரூடல் இன்டகிரேடன் சொலுயூசன்ஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்திய நேர்காணலில் மாணவிகள் 10 பேர் தேர்வாகினர். நிறுவன துணை மேலாளர் சாந்தகுமார் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. இவர்களுக்கான பணி ஆணையை கல்லுாரி செயலர் தாமோதரன் வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வழிகாட்டுதலில், கல்லுாரி வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் ஏற்பாடு செய்திருந்தார்.