மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் காட்டு யானைகள் ஆனந்த குளியலிட்டதை படகு சவாரி செய்தபடி சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணித்தவாறு அணையின் கரையோரம் அவ்வப்போது திரியும் காட்டு யானைகளை பயணிகள் ரசிப்பர். ஒரு வாரமாக அணையின் கரையோரம் உள்ள புல் மேடுகளில் நான்கு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளன. அவை புல்களை நன்கு தின்று விட்டு அணையில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தன. அவ்வாறு வரும் போது அணை தண்ணீரில் குளியலிட்டு திரும்பும்.
நேற்று வழக்கம்போல் நீர் அருந்த வந்த யானைகள் ஆனந்த குளியலிட்டன. அக்காட்சியை படகு சவாரி செய்த பயணிகள் ஏராளமானோர் ரசித்தனர்.