பழநி: பழநி அட்சயா பள்ளி பத்தாம் வகுப்பு ,12 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி., பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது.
பழநி அக்ஷயா சி.பி.எஸ்.இ., பள்ளி 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாக ஒன்பது மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக 34 மாணவர்களும் எடுத்துள்ளனர். மாணவர் கமல் விக்னேஷ் 484, குமார் 466, ஹரிசரன் 463, ஹர்ஷிதா 461, ஆரிப் 460 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 450 க்கு மேல் 20 மாணவர்களும், 400க்கு மேல் 39 மாணவர்களும், மாணவி ஹர்ஷிதா 487 மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை மாணவர்களை பள்ளித் தலைவர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராம் ,முதல்வர் காயத்ரி பாராட்டினர்.