சென்னை:இந்திய கடலோர காவல் படைக்கு அமெரிக்க கடலோர காவல் படை அளித்து வந்த 'கப்பல்களில் உட்புகும் பயிற்சி' வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த பயிற்சி நிறைவு விழா சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை விமான நிலையத்தில் நடந்தது. இதில் சென்னைஅமெரிக்க தூதுரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார தலைவர் விர்சா பெர்கின்ஸ் மற்றும் கிழக்கு கடலோர காவல்படைபிராந்திய தலைமையகத்தின் தலைவர் டி.ஐ.ஜி. சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நவீன பயிற்சி கிட்டத்தட்ட 12 நாட்கள் நடந்தது. இதில் கடல் ரோந்தின் போது எதிரி கப்பல்களில்உட்புகுவது போதைப்பொருள் மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற கடல் பாதுகாப்பு சவால்கள் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டனர் இந்திய கடலோர காவல் படை. இந்த பயிற்சியில் இந்திய கடலோர காவல்படையின் 5 பிராந்திய பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கடலோர காவல்படை அதிகாரிகள்பங்கேற்றனர்.