பண்ருட்டி-பள்ளி சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளி 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகன் பாலமுருகன், 32; கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 2022 நவம்பர் மாதம், பண்ருட்டி அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு பின், நேற்று, இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.