செஞ்சி,-களையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்ப மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் அஜய்குமார் 489, மாணவி திவ்யதர்ஷினி 463, மாணவர் ஜீவராஜன் 457, மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும் 400 மதிப்பெண்ணுக்கு மேல் 19 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2வில் மாணவி ஸ்ரீமதி 469, மாணவர்கள் கார்ல் பெர்ட் நிரஞ்சன் 436, பிரியதர்ஷன் 431 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும் 400 மதிப்பெண்ணுக்கு மேல் 8 மாணவர்கள் பெற்றனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களை கல்விக் குழும சேர்மன் பாபு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை மற்றும் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் (பொறுப்பு) அருள்முருகன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.