விழுப்புரம்,-வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
விக்கிரவாண்டி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம் மகன் பிரகாஷ், 22; இவர், அதே பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.
இவர், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.