கடலுார்-பிராமணர் சங்க கூத்தப்பாக்கம் கிளை சார்பில் பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பிராமணர் சங்க கடலுார் கூத்தப்பாக்கம் கிளை கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் திருமலை, நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார். சங்க உறுப்பினர் சங்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.
மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, பக்தவத்சலம், பாலசுப்ரமணியன், ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், வெங்கட்ராமன், பாலகுரு, திருவேங்கடத்தான், அமைப்புசெயலாளர் சம்பத், பொருளாளர் கணேசன், செயலாளர் பிரணதார்த்திஹரன் கருத்துரை வழங்கினர். சங்கரன் நன்றி கூறினார்.