புவனகிரி--புவனகிரியில் பொறியியல் பட்டதாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி புது பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிமொழி. இவர் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.பின்னர் விழுப்புரத்தில் குடும்பத்துடன் குடியேறினார். மணிமொழி சமீபத்தில் இறந்து விட்டார்.அவரது மனைவி புவனேஸ்வரி. இரு பிள்ளைகளுடன் விழுப்புரத்தில் வசித்து வந்தார். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
புவனகிரியில் உள்ள வீட்டிற்கு மூத்த மகன் பொறியியல் பட்டதாரியான பிரவீன்குமார், 33 ; வந்துள்ளார். வந்த பின் இரு தினங்களாக தாயாருக்கு போன் பேச வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் புவனேஸ்வரி போன் செய்துள்ளார் நீண்ட நேரம் ஆகிய பிரவீன் குமார் போன் எடுக்கவில்லை. இதனால் உறவினர் முருகவேல் என்பவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். முருகவேல் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தபோது பிரவீன்குமார் மின்விசிறியில் துாக்கு போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவரது தாய் புவனேஸ்வரி கொடுத்துள்ள புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன.