கடலுார்: கடலுார் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி, சி.பி.எஸ்.இ., தேர்வில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் உதயகுமார், யாழினி, ஜெயஸ்ரீ, ஹிமாவத், அனுஷா சமீகா ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர். பத்தாம் வகுப்பில் நந்தினி, பிரேமா, விஷ்ணுவர்தன், அமிர்தா, சஹானா ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். மாணவி அமிர்தா, பத்தாம் வகுப்பில் கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார்.
சாதனை படைத்தவர்களை, பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.மொழி பாடத்தில் 88 சதவீதம் பெற்றுத்தந்த ஆசிரியை லோகீதா மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஷீலா நன்றி கூறினார்.