கர்நாடக பா.ஜ.,வில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், எம்.எல்.ஏ., பதவிகளை வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். ஹூப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில் இருந்து, ஆறு முறை வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஹூப்பள்ளி- தார்வாட் மத்திய தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இதனால் காங்கிரசில் இணைந்து அந்த தொகுதியில் போட்டியிட்டார். எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பிக்கையில் இருந்தார். ஆனால், நேற்று வெளியான தேர்தல் முடிவுகள், ஷெட்டர் தலையில் இடியை இறக்கியது.
தேர்தலில் தோற்காத தலைவர் என்று பெயர் எடுத்தவர், பா.ஜ.,வின் மகேஷ் தெங்கினகாயிடம் தோற்று போனார். 34 ஆயிரத்து 53 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஷெட்டர் தோல்வியை தழுவினார். மகேஷ் தெங்கினயாயி 94 ஆயிரத்து 408 ஓட்டுகள் பெற்றார்.
ஷெட்டர் 60 ஆயிரத்து 355 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். தோல்வி வருத்தம் அளிக்கிறது. ஆனால் வடமாவட்டத்தில் நான் பிரசாரம் செய்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். என்னை தோற்கடிக்க பா.ஜ., பண பலத்தை பயன்படுத்தியது,'' என்றார்
- நமது நிருபர்-
.