பெங்களூரு-தீர்த்தஹள்ளியில், இளம் பெண்ணொருவர் இரவு முழுதும், பாம்புடன் படுத்துறங்கினார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், ஆரகா அருகில் உள்ள துடானகல் கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன், இளம் பெண்ணொருவர், இரவு வழக்கம் போன்று உறங்க சென்றார்.
மெத்தையில் பாம்பு இருப்பதை, அவர் கவனிக்கவில்லை. படுத்துறங்கினார். காலை படுக்கையில் இருந்து விழித்து எழுந்தவுடன், கையில் ஏதோ வழுவழுப்பாக தட்டுப்பட்டது. பக்கத்தில் பார்த்த போது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் அவர் இரவு முழுதும், பாம்புடன் உறங்கியது தெரிந்தது.
அதன்பின் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவரும் அங்கு வந்து, பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டு விட்டார். இரவு முழுதும் பாம்புடன் உறங்கியும், இளம் பெண்ணுக்கு அபாயம் ஏற்படாமல் தப்பினார்.