மீன் எண்ணெய் மாத்திரையை யார்யார் சாப்பிடலாம்?

Updated : மே 14, 2023 | Added : மே 14, 2023 | |
Advertisement
சுறா, திமிங்கலம், சால்மன் போன்ற ரக மீன்கள் ஆழ்கடலில் உள்ளன. இவற்றின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுத்து சிறிய நீள் செவ்வக வடிவக் குழாய்களில் அடைத்து மாத்திரையாக கடைகளில் விற்கப்படுகிறது. இவை 'காட் லிவர் ஆயில்' (Cod liver oil) மாத்திரைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் யார் சாப்பிடலாம், இது நல்லதா கெட்டதா எனத் தெரிந்துகொள்வோமா?மீன் எண்ணெய்
Who can take fish oil pills?  மீன் எண்ணெய் மாத்திரையை யார்யார் சாப்பிடலாம்?

சுறா, திமிங்கலம், சால்மன் போன்ற ரக மீன்கள் ஆழ்கடலில் உள்ளன. இவற்றின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுத்து சிறிய நீள் செவ்வக வடிவக் குழாய்களில் அடைத்து மாத்திரையாக கடைகளில் விற்கப்படுகிறது. இவை 'காட் லிவர் ஆயில்' (Cod liver oil) மாத்திரைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் யார் சாப்பிடலாம், இது நல்லதா கெட்டதா எனத் தெரிந்துகொள்வோமா?

மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துகள் குழந்தை கண் நோய்களைப் போக்க உதவும். முதியோருக்கு ஏற்படுகிற பார்வைக் கோளாறைத் தள்ளிப்போட உதவும். மூட்டு வலியைக் குறைக்க உதவும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதையும் ஓரளவு கட்டுப்படுத்தும். சருமப் பாதுகாப்பு கிடைக்கும். உடலில் காயங்கள் சீக்கிரம் ஆறும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச்சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் உள்ளன. டுனா, டிரவுட், சால்மன், காட் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் இவை குறைவாகவே உள்ளன. எனவே, எந்தவகை மீனிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதில் உள்ள சத்துகளின் அளவு அமையும்.


latest tamil news


இந்த மாத்திரை ஒருவித சத்து மாத்திரைதான் என்றாலும் அதையும் தேவையில்லாமல் சாப்பிடக்கூடாது. ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரையைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதைக் கூற முடியும். எனவே, இந்த மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கும் முன்னர் மருத்துவரை அணுகுவது நல்லது. மீன் மாத்திரையில் உள்ள அனைத்து நற்குணங்களும் சமைத்த மீன்கள், கேரட், தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவற்றில் உள்ளன. எனவே இவற்றை மீன் மாத்திரைக்கு மாற்றாக சாப்பிடுவதும் நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X