பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சி.டி.சி., மேடு அருகே ரோட்டோரம் பள்ளமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை ரோடு வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த ரோட்டோராத்தில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை ரோடு சி.டி.சி., மேடு புதிய ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அருகே ரோட்டோரம் மெகா சைஸ் பள்ளமாக உள்ளது. ரோட்டோரம் இருந்த மண் அரிக்கப்பட்டு பள்ளமாகவும், ரோடு மேடாகவும் உள்ளது.
இதனால், நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக வரும் போது, இருசக்கர வாகன ஓட்டுனர்கள், ரோட்டோரம் ஒதுங்க முயற்சிக்கும் போது, பள்ளத்தில் இறங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நடந்தாலும் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவதில்லை.
இதுபோன்று பொள்ளாச்சி - பல்லடம் ரோடு சி.டி.சி., மேடு அருகே ரோடு மேடாகவும், ஓரப்பகுதி பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, அதிகாரிகள் ரோட்டோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.