கோவை:துாத்துக்குடியில் நடந்த மாநில வாலிபால் போட்டியில், ஈச்சனாரி கற்பகம் பல்கலை அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
துாத்துக்குடி ரஜினி நற்பணி மன்றம் சார்பில், மாநில அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. கற்பகம் பல்கலை, சென்னை டி.ஜி., வைஷ்ணவ், பனிமலர் மற்றும் சத்யபாமா ஆகிய நான்கு அணிகள் பங்கேற்று 'லீக்' அடிப்படையில் போட்டியிட்டன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன், தலா ஒரு போட்டியில் விளையாடினர். அதிக வெற்றி பெறும் அணிக்கு முதலிடம் என்ற அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது.
முதல் லீக் போட்டியில், கற்பகம் அணி, 3 - 2 என்ற செட் கணக்கில் டி.ஜி., வைஷ்ணவ் அணியையும்; இரண்டாவது போட்டியில் 3 - 0 என்ற கணக்கில் சத்யபாமா அணியையும்; மூன்றாவது போட்டியில் 3 - 1 என்ற செட் கணக்கில் பனிமலர் கல்லுாரி அணியையும் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை கைப்பற்றியது.
அணி வீரர்களை, கற்பகம் பல்கலையின் துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.