பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலக வளாகத்தில், 4.28 கோடி ரூபாய் செலவில் அரங்கம் மற்றும் பி.ஏ.பி., என்ற பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமானவர்களுக்கு சிலை அமைக்கும் பணிகள் துவக்கப் பட்டுள்ளன.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம், ஆழியாறு அணை அருகே கட்டப்படுகிறது.
பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி., அலுவலகத்தில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கம் மற்றும் திட்டம் உருவாக காரணமானவர்களின் உருவச்சிலை வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததால், இதற்கான பணிகள் துவங்கப்பட்டன.
முதற்கட்டமாக இரண்டு அடுக்குகள் கொண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி., அலுவலக வளாகத்தில் நடைபெறும் பணியை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
இந்த மண்டபத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., அருட்செல்வர் மகாலிங்கம் ஆகியோரது சிலைகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.