கிடைக்காத குடிநீர்
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிக்கு, 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சியாகியும், நிலை மாறவில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
- செல்வி, திருமுருகன்பூண்டி.
எரியாத விளக்கு
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் ரோடு, வசந்தம் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.
- செல்வராஜ், வசந்தம்நகர்.
அகலாத செடி
திருப்பூர், குமரன் ரோடு - முனிசிபல் ஆபீஸ் வீதி சந்திப்பு பாலத்தில் செடி வளர துவங்கி விட்டது. மரமாக மாறி கட்டடம் விரிசல் அடையும் முன் அகற்றிட வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.
உடைந்த குழாய்
திருப்பூர், 15 வேலம்பாளையம், டி.டி.பி., மில் கார்னர், ஸ்ரீபதி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சுதர்சன் பெரியசாமி, ஸ்ரீபதிநகர்.
அபாய மின்கம்பம்
அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் அடிபாகம் முழுமையாக சேதமடைந்து, மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.
- பிரித்வி, கிருஷ்ணாபுரம்.
திருப்பூர், தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
- மாலதி, நாவிதன் தோட்டம்.
பழுதான சாலை
தாராபுரம், அமராவதி ஆற்று பாலத்தில், சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- ராசாமணி, தாராபுரம்.
பதறும் மக்கள்
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளே நாய் உறங்குவதால், பணம் எடுக்க செல்வோர் பதட்டம் அடைகின்றனர்.
- ரஞ்சித்குமார், எம்.எஸ்., நகர்.
வீணாகும் மின்சாரம்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, முருகப்ப செட்டியார் ஸ்கூல் வீதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
- சந்தோஷ்குமார், பாளையக்காடு.
விரயமாகும் தண்ணீர்
திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்., புரம் மெயின் வீதியில் அவ்வப்போது டேங்க் நிரம்பி தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. சரியான நேரத்துக்கு மோட்டார் இயக்கத்தை நிறுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- ராஜேஷ்குமார், ஆர்.எஸ்., புரம்.
கிடைக்காத குடிநீர்
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிக்கு, 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சியாகியும், நிலை மாறவில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
- செல்வி, திருமுருகன்பூண்டி.
எரியாத விளக்கு
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் ரோடு, வசந்தம் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.
-செல்வராஜ், வசந்தம்நகர்.
அகலாத செடி
திருப்பூர், குமரன் ரோடு - முனிசிபல் ஆபீஸ் வீதி சந்திப்பு பாலத்தில் செடி வளர துவங்கி விட்டது. மரமாகி மாறி கட்டுமானம் விரிசல் அடையும் முன் அகற்றிட வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)
உடைந்த குழாய்
திருப்பூர், 15 வேலம்பாளையம், டி.டி.பி., மில் கார்னர், ஸ்ரீபதி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சுதர்சன் பெரியசாமி, ஸ்ரீபதிநகர். (படம் உண்டு)
அபாய மின்கம்பம்
அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் அடிபாகம் முழுமையாக சேதமடைந்து, மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.
- பிரித்வி, கிருஷ்ணாபுரம். (படம் உண்டு)
திருப்பூர், தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
- மாலதி, நாவிதன் தோட்டம். (படம் உண்டு)
பழுதான சாலை
தாராபுரம், அமராவதி ஆற்று பாலத்தில், சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- ராசாமணி, தாராபுரம். (படம் உண்டு)
பதறும் மக்கள்
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளே நாய் உறங்குவதால், பணம் எடுக்க செல்வோர் பதட்டம் அடைகின்றனர்.
- ரஞ்சித்குமார், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)
வீணாகும் மின்சாரம்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, முருகப்ப செட்டியார் ஸ்கூல் வீதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
- சந்தோஷ்குமார், பாளையக்காடு. (படம் உண்டு)
விரயமாகும் தண்ணீர்
திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்., புரம் மெயின் வீதியில் அவ்வப்போது டேங்க் நிரம்பி தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. சரியான நேரத்துக்கு மோட்டார் இயக்கத்தை நிறுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- ராஜேஷ்குமார், ஆர்.எஸ்., புரம். (படம் உண்டு)