திருப்பூர்;காங்கயம் சப்-டிவிஷனில் போலீஸ் ஸ்டேஷன்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் வரும், 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
காங்கயம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் தொடர்பாக மொத்தம், 79 டூவீலர்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள் வரும் 17 ம் தேதி காலை, 11:00 மணிக்கு காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு ஸ்டேஷனை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.