ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ராணுவ சாலையில், ஆவடி மார்க்கெட் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் அருகில் மாநகராட்சி குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டி அருகே பேருந்து நின்று செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இரவு வேளைகளில் விபத்து அபாயம் நீடிக்கிறது.
அதேபோல், கவுரிப்பேட்டையில் இருந்து என்.எம்., சாலைக்கு திரும்பும் வாகனங்கள், குப்பைத் தொட்டியால் விபத்தில் சிக்குகின்றன. எனவே, குப்பைத் தொட்டியை மாற்றி வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகுமார், ஆவடி.