விருதுநகர்--தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்க தோண்டி சேதமான ரோடுகள், 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை, தெருக்கள் தோறும் நாய்கள் தொல்லை, இருள் சூழ்ந்த ரோடு என அவதியில் உள்ளனர் விருதுநகர் 32வது வார்டு பொதுமக்கள்.
இந்த வார்டில் சிவந்தி புரம் 1, 2வது தெருக்கள், சிவந்தி புரம் 4 முதல் 11வது தெருக்கள், பவுண்டு தெருவின் மேற்கு பகுதி என 11 தெருக்கள் அடங்கும். இத்தெருக்களில் 12 நாட்களுக்கு ஒரு முறை தரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் தட்டுப்பாடு நிலவுகிறது.
தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்காக தெருக்கள் அனைத்தும் தோண்டப்பட்டதால் சேதமாகி குண்டும்குழியுமாக காணப்படுகின்றன. மேலும் ஒரு மீட்டர் ஆழம் தோண்டி பதிக்க வேண்டிய குடிநீர் குழாய்களை கடமைக்காக ஒரு அடி குழியில் புதைத்து மூடியுள்ளனர். இது பயன்பாட்டுக்கு வரும் போது பிரச்னையை ஏற்படுத்தும்.
வாறுகால் துார்வாறாமல் பிளாஸ்டிக் குப்பை அடைத்து நிற்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் கழிவுகள் அனைத்தும் வாறுகாலில் கலக்கிறது.
மழை நேரங்களில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியே கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்குகிறது. சில இடங்களில் மேன்ஹோல் ரோட்டில் இருந்து உயரமாக உள்ளதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
தெரு விளக்குகள் போதிய வெளிச்சமின்றி உள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து முதியோர், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. இதற்கு நகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற வேண்டும்.-சங்கர், சமூகஆர்வலர்.குடிநீரால் நோய் பரவல்நகராட்சி வினியோகிக்கும் தரமற்ற உப்புநீரை குடிப்பதால் நோய்கள் வருகின்றன. அதுவும் 12 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. எனவே குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம். குடிநீர் வரி வசூலிக்கும் நகராட்சி அதை சுத்தமாக வினியோகிக்க வேண்டும்.-இந்திரா, குடும்பத் தலைவி.
நாய்கள் தொல்லை

சிவந்திபுரம் தெருக்களில் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படும் நிலை உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர்கணேஷ், டிரைவர்.
நகராட்சி ஒத்துழைப்பு இல்லை
தாமிரபரணி குடிநீர் திட்டப் பணிக்கு தோண்டிய தெருக்கள் சேதமடைந்து அப்படியே உள்ளன. தரமான குடிநீர் வழங்க முயற்சிக்கிறோம். தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பை தேங்குகின்றன. பேட்டரி வாகனம் ஒன்றை வைத்து அனைத்து தெருக்களிலும் குப்பை அள்ளுவது சாத்தியமற்றது. எனவே கூடுதலாக ஒரு பேட்டரி வாகனம், தூய்மை பணியாளர் வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.
-கலையரசன், 32வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.