விருதுநகர்--விருதுநகர் அல்லம்பட்டி ராமன் தெருவை சேர்ந்தவர் சைக்கிள் கடை நடத்தி வரும் ஆண்டவர் 58, இவர் தனக்கு சொந்தமான வீட்டில் 12 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இவர்களது வீட்டின் கான்கிரீட் மேற்கூரையில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் கான்கிரீட் கூரை மழைநீரில் ஊறி இடிந்து விழுந்து சேதமாகின.
இதனால் வீட்டில் உள்ள டிவி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாகியது. இது குறித்து நிவாரணம் கோரி கலெக்டரிம் மனு அளிக்க உள்ளதாக ஆண்டவர் தெரிவித்தார்.