விருதுநகர்,-விருதுநகர் மாவட்ட கணினி விற்பனையாளர் சங்கம், ஏ.என்.டி., அறக்கட்டளை இணைந்து சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவம், இருதய நோய், கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
ஏ.என்.டி., அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். சிவகாசி மேயர் சங்கீதா துவக்கி வைத்தார். மதுரை பாண்டியன் மருத்துவமனை இருதய டாக்டர் பாண்டியன் சிகிச்சையளித்தார். வாசன் கண் மருத்துவ மனை குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கணினி விற்பனையாளர்கள் சங்க தலைவர் மாரிக்கனி, செயலாளர் சுரேஷ், செய்தனர்.