கோவை : ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு, 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர்களை, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவிலிருந்து, 'ஏர் அரேபியா' விமானம் நேற்று கோவை வந்தது.
அதில் வந்த பயணியர் நான்கு பேரை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்களது பேன்ட் பாக் கெட் மற்றும் உள்ளாடைக் குள் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு, 3.03 கிலோவாகும். இதன் மதிப்பு, 1.9 கோடி ரூபாய். தங்கம் கடத்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜியாவுதீன், 27, சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது, 31, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.