நயினார்கோவில்--வேளாண் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நயினார்கோவில் ஒன்றியம் பகைவென்றி கிராமத்தில் பயறு விதை கிராம குழு அமைக்கப்பட்டுள்ளது.
நயினார்கோவில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், உலக வங்கி நிதி உதவியுடன் பாசன வேளாண் நவீன மயமாக்கும் திட்டம், கீழ் வைகை உபவடிநில பகுதியில் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
பகை வென்றி கிராமத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்ட பயறு விதை கிராம குழு அமைக்கப்பட்டு விவசாயி ராஜேந்திரன் வயலில் வி.பி.என். 10 உளுந்து உயர் விளைச்சல் ரகம் விதைப்பண்ணை அமைத்து, வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு சுழல் நிதியாக ரூ.50ஆயிரம் இடுபொருட்கள் வாங்க வழங்கியுள்ளனர்.
இதனை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் ஜவஹர் குழு ஆய்வு செய்தார். நயினார் கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், அதிகாரிகள் உடனிருந்தனர்.