ஆண்டிபட்டி--ஆண்டிபட்டி ஒன்றியம் கரிசல்பட்டி அருகே ரயில்வே சுரங்க பாலத்தின் நுழைவுப் பகுதியில் சேதம் அடைந்த சிறு பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தில் கரிசல்பட்டி அருகே சுரங்க பாலம் கட்டப்பட்டுள்ளது. மதுரை - தேனி மெயின் ரோடு எஸ்.எஸ்.புரத்தில் இருந்து கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி, வழியாக ஆசாரிபட்டி உட்பட பல கிராமங்களுக்கு இந்த ரோட்டை கடந்துதான் செல்லவேண்டும்.
ரயில்வே சுரங்க பாலம் அமைத்த போது இப்பகுதியில் மழை நீரை கடத்துவதற்காக நுழைவுப் பகுதியில் சிறு பாலம் அமைக்கப்பட்டது. சிறு பாலத்தின் கான்கிரீட் மேல் தளம் உடைந்து பல மாதங்கள் ஆகிறது.
இதனை சரி செய்யும் நடவடிக்கை இல்லை. கனரக வாகனங்கள் இந்த இடத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரவில் இந்த ரோட்டில் வரும் வாகனங்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.