பணி விதிகள் அரசாணையை அரசு வெளியிட வலியுறுத்தி இன்று (மே 15ல்) முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்க உள்ளது.
மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ தலைமையில் நடக்கும் இப்போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து 92 ஊராட்சிச் செயலர்கள் பங்கேற்க சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன .
அவற்றில் காலி பணியிடங்கள், உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் 38 பேர் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 92 பேர் பங்கேற்கின்றனர். தொடர் போராட்டம் என்பதால் எத்தனை நாள் என்பது தெரியவில்லை. இதனால் ஊராட்சிகளில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் சப்ளை, பொதுச் சுகாதார பராமரிப்பு, தெரு விளக்குகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.