தேனி-மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் என, நாளை (மே 16) காலை 11:00 மணிக்கு 2 இடங்களில் நடக்கிறது.
மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மார்ச்சில் உத்தமபாளையம் வருவாய் கோட்டத்திலும், ஏப்ரலில் பெரியகுளம் வருவாய் கோட்டத்திலும் நடந்தது. இம்மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 2 வருவாய் கோட்டங்களிலும் ஒரே நாளில் நடத்த அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாளை உத்தபாளையம் தாலுகா அலுவலுகத்தில் ஆர்.டி.ஓ., பால்பாண்டி தலைமையிலும், பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முத்துலட்சுமி தலைமையிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. தங்கள் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.