நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம், ஜெயராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் கவுரவ தலைவராக அப்துல் ஹமீது, தலைவராக ஜெயராமன், துணைத்தலைவராக ஆதிநாராயணன், செயலாளராக தேவநாதன், துணை செயலாளராக தவமணி, பொருளாளராக இளங்கோவன்,செயற்குழு உறுப்பினர்களாக அப்துல்அக்பர், சரஸ்வதி, ஜெயராமன், மங்கையர்கரசி,சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில தலைமை சங்கத்துடன் இணைந்து ஓய்வூதியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.