தேனி -தேனி அரண்மனைப்புதுாரில் சட்ட விரோத விற்பனைக்காக பார்வதியம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3.57 லட்சம் மதிப்புள்ள 23 மூடை போதை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகளை கைப்பற்றிய பழனிச்செட்டிபட்டி போலீசார், பதுக்கலில் ஈடுபட்ட அல்லிநகரம் மண்டுகருப்பணசாமி கோவில் தெரு கவுதம் 20, பாரஸ்ட் ரோடு 7 வது தெரு நவரத்னவேல் 41, அரண்மனைப்புதுார் பார்வதியம்மன் கோயில் தெரு கடை உரிமையாளர் கண்ணன் 40, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தேனி அரண்மனைப்புதுார் அம்பேத்கார் சிலை அருகே போதைப் பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டூவீலரில் கைதான கவுதம், நவரத்னவேல் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்து டூவீலரில் சென்றனர். அவர்களிடம் விசாரணை செய்தனர்.
அவர்கள் கடை உரிமையாளர் கண்ணனிடம் போதைப்பொருட்கள் வாங்கி விற்பதாக தெரிவித்தனர்.
இவர்களின் வாக்குமூலத்தின் படி கவுதம், நவரத்னவேல், கண்ணன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீசார், சட்ட விரோத விற்பனைக்காக கண்ணனின் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 880 மதிப்பிலான 23 மூடைகளில் நிரப்பப்பட்ட போதை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
இதில் கைதான நவரத்தினவேல் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 6 வழக்குகள், கண்ணன் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.