விழுப்புரம்: இரண்டு வயது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் சாலாமேட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ் மனைவி சுகன்யா, 31; இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து, குழந்தை நவநீத்ராஜூடன், 2; தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி இரவு சுகன்யா தனது குழந்தையுடன் விளையாடிவிட்டு இருவரும் துாங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது நவநீத்ராஜ் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். உடன், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நவநீத்ராஜ் இறந்து விட்டதாக கூறினர்.
புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.