சிதம்பரம்: சிதம்பரம் அருகே காசநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.
சிதம்பரம் அடுத்த வையூர் ஊராட்சியில் நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனத்தின் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
சிவக்கம் வட்டார தேசிய காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி ராமமூர்த்தி, வல்லம்படுகை மருத்துவ அலுவலர் பாலாஜி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஞானபிரகாஷ், ஆய்வக நுட்புனர் கணேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் நோய் தாக்கும் அபாயம் உள்ள 75 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வையூர் சுகாதார செவிலியர் சுமதி நன்றி கூறினார்.