காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஆற்றங்கரை பேட் பகுதிக்கு காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.26.87லட்சம் மதிப்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இப்பணிகளை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.,நாகதியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் சுதர்சனன்.
இளநிலை பொறியாளர் கோபிநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.