புதுச்சேரி: டி.என்.பாளையம் ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தில் சத்தியபாமா கல்விக்குழுமம் மூலம் ஏ.ஜே. - சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்து வருகிறது. தற்போது நடந்த சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்விலும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. பள்ளி தாளாளர்கள் மேரி ஜான்சன், மேரி ஜீனாஜான்சன், முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் வழிகாட்டுதலில், இத்தேர்ச்சி சாதனையை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பள்ளியில் மாணவி தர்ஷினி 96.2 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 2வது இடத்தை அரிராஜ், 3வது இடத்தை வினித் ஆகியோர் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்களை, தாளாளர்கள் மேரி ஜான்சன், மேரி ஜீனாஜான்சன், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி பரிசளித்தனர்.
இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச் ஆகிய நான்கு மொழிகள் கற்பிக்கப்படுகிறது.
பிளஸ் 1 சேர்க்கைக்கு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை அளிப்பதாக தாளாளர் தெரிவித்துள்ளார். இங்கு, பிளஸ் 1 வகுப்பு பிரிவுகளில் உயிரியல், கணினி மற்றும் வணிகவியல் பிரிவுகளுக்கு சேர்க்கை நடக்கிறது.