அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திர வெயிலை பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் கூடுதலாக வருவர்.
விடுமுறை நாளான நேற்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டனர். இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், தரை விரிப்புகளை அமைத்திருந்தனர். பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்பட்டது.