கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் கடந்த, 1999-2002ல், வரலாறு பிரிவில் படித்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று, 25 ஆண்டுகளுக்கு பிறகு, அவரவர் குடும்பத்தினருடன் சந்தித்து, கல்லுாரி நாட்களில் நடந்த, சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் கல்லுாரி பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் பேராசிரியர் குருநாதன், முன்னாள் மாணவ, மாணவியர் அசன் நவாஸ், ஆண்டனி செல்வராஜ், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரி, ராதாம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.