சென்னை : விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து, இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், செங்கல்பட்டு எஸ்.பி., பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார், இரண்டு நாட்களாக தீவிர, கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
இது குறித்து, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளதாவது:
கடந்த இரண்டு நாட்களில், 1, 842 வழக்குகள் பதியப்பட்டு, 19, 028 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. 4,943 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட, 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.