ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் 3 நாட்கள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறிக்கை:
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 13 இடங்களில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது. 17ம் தேதி ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ரிஷிவந்தியம், சித்தால், யால், சூளாங்குறிச்சியில் நடக்கிறது. 18ம் தேதி திருக்கோவிலுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலுார், கீழத்தாழனுார், டி.கே.மண்டபம், டி.கீரனுார், திருப்பாலபந்தல் மற்றும் மணலுார்பேட்டையிலும் நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ரங்கப்பனுார், பிரம்மகுண்டம், மேல்சிறுவள்ளூர், மூங்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களிலும் நடக்கிறது.
முகாம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தனிநபர் கோரிக்கை, பொது பிரச்னை தொடர்பான மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.