விழுப்புரம் : சர்வதேச மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று விழுப்புரம் திரும்பிய வீரருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில், கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 2வது சர்வதேச மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற தமிழக அணியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாமல்லன் ஹேமச்சந்திரன் கயிறு மல்லர் கம்பம் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில், இரண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்து, நேற்று ஊர் திரும்பிய விளையாட்டு வீரரை, தமிழ்நாடு மல்லர்கம்பம் கழகம் மற்றம் விளையாட்டு வீரர்கள், பெற்றோர், பொது மக்கள் வரவேற்பளித்தனர்.
நேற்று இரவு விழுப்புரம் ரயில் நிலையம் வந்த ஹேமச்சந்திரனுக்கு, மாலை மற்றும் சால்வை அணிவித்து, பறை இசையுடன் கூடிய சிலம்பாட்டத்துடன் வரவேற்றதோடு, அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.