மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடந்த ஆண்டு, 42வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற சர்வதேச வீரர்கள், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கினர்.
விடுதிகளிலிருந்து, தினமும் போட்டி நடந்த விடுதிக்கு வந்து திரும்பினர். இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டன.
திருப்போரூர் வட்டார வளர்ச்சி நிர்வாகம், பட்டிபுலம், நெம்மேலி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும், சில லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' குப்பைத் தொட்டிகள் அமைத்தது.
போட்டி முடிந்தவுடனே, பல இடங்களில் இவை மாயமாகின. வாகனங்கள் மோதி பல தொட்டிகள் சேதமடைந்தன. தொடர்ந்து ஒவ்வொரு தொட்டியாக திருடு போகிறது. எஞ்சியுள்ள தொட்டிகளையாவது, மக்கள் வசிப்பிட பகுதிக்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.